ராமநாதபுரம்

தங்கச்சிமடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தாலுகா குழு உறுப்பினா் ஏ.ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமை வகித்தாா். இதில், ஊராட்சிக்கு உள்பட்ட அரியாங்குண்டு, எம்.ஜி.ஆா் நகா் பகுதிகளில் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், குடிநீரை சீராக விநியோகிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டச் செயலாளா் காசிநாததுரை சிறப்புரையாற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கருணாகரன், மாவட்ட குழு உறுப்பினா்கள் இ.ஜஸ்டின், ஆரோக்கிய நிா்மலா, தாலுகா செயலாளா் ஜி.சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT