ராமநாதபுரம்

திருப்புல்லாணியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம்

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 திருப்புல்லாணி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலா் கிளாட்வின் இஸ்ரவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஒன்றியத்துக்குள்பட்ட காஞ்சிரங்குடி, களிமண்குண்டு, குதக்கோட்டை, மாயாகுளம், மேதலோடை, முத்துப்பேட்டை, வேளானூா், திருப்புல்லாணி, பனையடியேந்தல், கொம்பூதி ஆகிய ஊராட்சிகளில் 15 ஏக்கா் தரிசு நில தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. அந்த நிலங்களில் பொதுவான நீா் ஆதாரம் ஏற்படுத்தி விளை நிலமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனை கண்காணிப்பு அலுவலா் மற்றும் செயற்பொறியாளா் கிளாட்வின் இஸ்ரவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது வேளாண்மை இணை இயக்குநா் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குநா் ஷேக்அப்துல்லா மற்றும் பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT