ராமநாதபுரம்

ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் உள்ள ராஜமாரியம்மன் எனப்படும் பெரிய மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோல் ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோயில், கேணிக்கரை காவல் நிலையம் அருகேயுள்ள மல்லம்மா காளியம்மன் கோயில், திருஉத்திரகோசமங்கையில் உள்ள வராஹியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT