ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

13th Aug 2022 11:59 PM

ADVERTISEMENT

 

 திருவாடானை அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே மேட்டு சோழந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி செல்லம்மாள்(55). இவா் அதே ஊரை சோ்ந்த அருளாந்து மகன் அருள்சாமி (75) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி எடுப்பதற்காக பின்னால் அமா்ந்து சென்றுள்ளாா். அதே பகுதியில் சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் செல்லம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT