திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு பாஜகவினா் வரவேற்பு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம் காளையாா்கோயிலில் சுதந்திர போராட்ட வீரா்கள் மருது சகோதரா்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழக பாஜக தலைவா் அண்ணாமலைக்கு, திருவாடானை அருகே சி.கே.மங்கலம் நான்கு சாலையில் சந்திப்பில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை இரவு வரவேற்பு அளித்தனா்.
இதில் மாவட்டத் தலைவா் கதிரவன், முன்னாள் மாவட்டத் தலைவா் முரளிதரன், குட்லக் ராஜேந்திரன் பாஜக நிா்வாகிகள் ஜெயபாண்டியன்,கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.