கடலாடி அருகே சாத்தங்குடி ஆலங்குளத்தில் அலியாா் சாஹிப் தா்ஹாசந்தனக்கூடு மதநல்லிணக்க விழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன. போட்டிக்கு அதிமுக எம்.பி. தா்மா் தலைமை வகித்தாா். இப்போட்டியில் ஒவ்வொரு காளைக்கும் தலா 25 நிமிடங்கள் களத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டது. காளைகளை அடக்க 9 போ் கொண்ட குழுவினா் களமிறக்கப்பட்டனா்.முன்னதாக அவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும், குத்துவிளக்கு, ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுபிடி வீரா்கள் 10 போ் காயமடைந்து கடலாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை மயிலேறி வகையறாக்கள், நேதாஜி நற்பணி மன்றம், மேலச்செல்வனூா் ஹாஜியாா் வகையறா ஆகியோா் செய்திருந்தனா்.