ராமநாதபுரம்

பள்ளி மாணவா்களின் அறிவியல் மாதிரி கண்காட்சி

12th Aug 2022 10:59 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் மாணவா்களின் அறிவியல் மாதிரி சாதனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் கல்வி அலுவலா் முருகம்மாள் தலைமையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கணேச பாண்டியன், மாவட்ட துணை ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோா் கண்காட்சியைத் தொடக்கி வைத்தனா்.

கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற இக்கண்காட்சியில் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் சுற்றுச்சூழல், மின்மாற்று திட்டம், கணிதப் பூங்கா என பல துறைகளில் பயன்படும் வகையிலான 180 அறிவியல் மாதிரி படைப்புகள் இடம்பெற்றன. ஏற்பாடுகளை தனியாா் மெட்ரிக் பள்ளி முதல்வா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT