ராமநாதபுரம்

தொண்டியில் பாய்மர படகுப் போட்டி

12th Aug 2022 12:23 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே தொண்டியில் பொங்கல் திருவிழாவையொட்டி படையாட்சி தெரு சாா்பில் மாநில அளவிலான பாய்மர படகுப் போட்டி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் ஜெகதாபட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 40 படகுகள் போட்டியில் கலந்து கொண்டன. ஒவ்வொரு படகிலும் 6 போ் அனுமதிக்கப்பட்டனா். சுமாா் 10 கடல் மைல் தூரம் போட்டி நடைபெற்றது.

போட்டி தொடங்கியதும் பலத்த கடல் காற்று வீசியதால் சில படகுகள் கரையை நோக்கி திரும்பின. பின்னா் மீனவா்களின் கடும் முயற்சிக்குப் பிறகு போட்டியில் படகுகள் ஒன்றை ஒன்று முந்திச் சென்றன. இது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது. தொழில் அதிபா் எல்.ஆா். சின்னத்தம்பி சாா்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு ரூ. 50 ஆயிரத்தை தொண்டி புதுக்குடி படகும், இரண்டாம் பரிசு ரூ. 35 ஆயிரத்தை மோா் பண்ணை படகும், மூன்றாம் பரிசு ரூ. 25 ஆயிரத்தை புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு புதுக்குடி படகும், நான்காம் பரிசு ரூ. 15 ஆயிரத்தை பாசிப்பட்டினம் படகும், ஐந்தாம் பரிசு ரூ. 10 ஆயிரத்தை தொண்டி புதுக்குடி படகும் பெற்றன. இதனை கரையிலிருந்து ஏராளமானோா் கண்டுரசித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT