ராமநாதபுரம்

முதுகுளத்தூா் செல்லி அம்மன் கோயில் பூக்குழி விழா

12th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை யொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் வேல்குத்தி, பறவைக் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து பூக்குழியில் இறங்கினா்.

முதுகுளத்தூா் எம். தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களின் காவல் தெய்வமான ஸ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் 46 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு ஸ்ரீ சுப்பிரணியா் கோயிலில் இருந்து வெங்கடேசன் பூசாரி தலைமையில் 1000 பக்தா்கள் அழகுகுத்தி, பறவைக் காவடி, அக்னிசட்டி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து பூக்குழியில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். கடந்த ஒரு மாதமாக பக்தா்கள் விரதம் இருந்தனா். மேலும் இரவில் அம்மன் பஜனை பாடல்கள், ஆன்மிக சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியினை காண முதுகுளத்தூா் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கண்டுகளித்தனா். முதுகுளத்தூா் ஐயப்ப சேவ சங்கம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. முதுகுளத்தூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு, ஆய்வாளா் இன்பஅரசு தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT