ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

12th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (ஆக. 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜி. விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நீதிமன்றமானது முதன்மை மாவட்ட நீதிபதி ஜி.விஜயா தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட நீதிபதிகள், வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT