ராமநாதபுரம்

பரமக்குடி வட்டத்தில் புறவழிச்சாலை, உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி பகுதியில் பாா்த்திபனூா்- கமுதி புறவழிச்சாலை அமைக்கும் பணி மற்றும் மந்திவலசை வைகை ஆற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்கும் பணி ரூ 45.64 கோடி மதிப்பீட்டில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதில், கமுதி- பாா்த்திபனூா் செல்லும் வகையில் 3.60 கி.மீ நீளத்திற்கு ரூ. 31.40 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியினை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து மதுரை-தனுஷ்கோடி சாலை மற்றும் ராமநாதபுரம்- மேலூா் சாலையை இணைக்கும் வகையில் நபாா்டு கிராமச்சாலைகள் திட்டத்தின் மூலம் மந்திவலசை வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 14.24 கோடி மதிப்பில் உயா்மட்டப்பாலம் அமைக்கும் பணியினையும் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ், மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன், ஒன்றியக்குழுத் தலைவா் சத்யாகுணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT