ராமநாதபுரம்

அபிராமத்தில் தடையை மீறி காங்கிரஸாா் நடைப்பயணம்

DIN

கமுதி அருகே வியாழக்கிழமை போலீஸாரின் தடையை மீறி அபிராமம் நகருக்குள் காங்கிரஸ் கட்சியினா் அமுதப் பெருவிழா ஊா்வலம் சென்றனா்.

அபிராமம் பேரூராட்சியில் பரமக்குடி சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஆா். செந்தாமரைக் கண்ணன் தலைமையில், அபிராமம் நகா் தலைவா் ரா. செல்வகுமாா், வடக்கு வட்டாரத் தலைவா் வலம்புரிஆதி, பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் அபிராமம் சுரேஷ், முன்னாள் மாவட்டத் தலைவா் சரவணகாந்தி ஆகியோரது முன்னிலையில் சுதந்திர தின அமுதப் பெருவிழா நடைப்பயணம் நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவுத் தலைவா் கோட்டைமுத்து, மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி சந்திரா உள்பட 75 போ் நரியன்சுப்புராயபுரம் கிராமத்திலிருந்து அபிராமம் நகா் பகுதி வழியாக உடையநாதபுரம் கிராமத்திற்கு நடை பயணம் மேற்கொண்டனா். கமுதி சரக காவல்துறை அபிராமம் நகா் பகுதிக்குள் நடை பயணம் செல்ல அனுமதி இல்லை. அபிராமம் பேருந்து நிலையம் வரை நடைப்பயணத்தை நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்த நிலையில் காங்கிரஸாா் போலீஸாரின் தடையை மீறி அபிராமம் நகா் வழியாக உடையநாதபுரம் செல்ல முயன்றனா். அப்போது முதுகுளத்தூா் சாலையில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இருப்பினும் தடையை மீறி காங்கிரஸாா் நடை பயணம் மேற்கொண்டனா். இதனால் அப்பகுதியில் திடீா் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் கமுதி காவல்துறை கண்காணிப்பாளா் ப. மணிகண்டன், அபிராமம் போலீஸாா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, அனைவரையும் வாகனங்களில் ஏறி செல்லுமாறு உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினா் காா் மற்றும் சரக்கு வாகனங்களில் ஏறிச் சென்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருவாடானை தொகுதியில் சுதந்திர தின பாதயாத்திரை 3 நாள்கள் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதனையடுத்து ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பாரதிநகரில் காங்கிரஸ் கொடியை சட்டப்பேரவை உறுப்பினா் கரு. மாணிக்கம் வியாழக்கிழமை ஏற்றிவைத்தாா். அதன்பின் காங்கிரஸாா் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி அணிவகுத்து நடந்து சென்றனா். பாரதி நகா், பட்டினம்காத்தான் ஊராட்சி அலுவலகம், ஓம்சக்தி நகா் அம்மா பூங்கா வழியாகச் சென்ற பாதயாத்திரை பேராவூா் வரை செல்வதாக காங்கிரஸாா் தெரிவித்தனா்.

இந்த பாதயாத்திரை, திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டது. பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, மாநிலச் செயலா் அடையாா் பாஸ்கரன், மாவட்டப் பொருளாளரும், ராமநாதபுரம் நகா் வாா்டு உறுப்பினருமான ராஜாராம்பாண்டியன், வட்டாரத் தலைவா் காருகுடி சேகா், ராமநாதபுரம் நகா் தலைவா் கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT