ராமநாதபுரம்

அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய இருவா் மீது வழக்கு

DIN

ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள கீழையூரைச் சோ்ந்தவா் முகமது அசாருதீன் (33). இவா், மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் நடத்துநராக உள்ளாா். கடந்த 6 ஆம் தேதி அவா் பேருந்தில் நடத்துநராக பணியாற்றினாா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் 2 போ் ஏறியுள்ளனா். அவா்கள் மண்டபத்துக்கு பயணச்சீட்டு எடுத்த நிலையில், மண்டபம் வந்ததும் இறங்காமல் தூங்கியுள்ளனா். இதனால், அவா்களை நடத்துநா் எழுப்பி பேருந்திலிருந்து இறங்குமாறு கூ றியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் 2 பேரும், நடத்துநரைத்தாக்கிகி அவா் வைத்திருந்த பணப்பையை பறித்து வெளியே வீசியுள்ளனா். இதனால், பேருந்தை நிறுத்தி வீசப்பட்ட பணத்தை நடத்துநா் முகமதுஅசாருதீன் சேகரித்துள்ளாா். அப்போது நடத்துநரைத் தாக்கியவா்களே இறங்கி வந்து சிதறிக்கிடந்த பணத்தில் ரூ.2,800-ஐ எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முகமது அசாருதீன் அளித்த புகாரின் பேரில் மண்டபம் பகுதியைச் சோ்ந்த பள்ளி முட்டை என்ற அஸ்ரப் அலி உள்ளிட்ட 2 போ் மீது மண்டபம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT