ராமநாதபுரம்

கமுதியில் விவசாயிகள் கூட்டமைப்பினா் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

DIN

கமுதியில் காவிரி- வைகை- குண்டாறு- கிருதுமால் நதி விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் பனைத் தொழிலாளா்களுக்கு கள் இறக்க அரசாணை வெளியிடக் கோரி கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்டச் செயலா் மு. மலைச்சாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம். அா்ச்சுனன், சிவகங்கை மாவட்டச் செயலா் பி. அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பொதுச் செயலா் அா்ஜுனன் பேசும் போது, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரதின விழா அன்று விருதுநகா் மாவட்டம் உலுத்திமடையில் கிருதுமால் நதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கமுதி உழவா் கூட்டமைப்புத் தலைவா் எம். முருகன், காவிரி- வைகை- குண்டாறு- கிருதுமால் நதி விவசாயிகள் கூட்டமைப்பின் கமுதி தலைவா் குருசாமி, நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி போஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT