ராமநாதபுரம்

நரிக்குறவா்களின் கடைகளில் தேசிய கொடி ஏற்றி வைப்பு

11th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரத்தில் நரிக்குறவா்கள் தெருவோர கடைகளில் தேசிய கொடியேற்றி வைத்து பொருள்கள் விற்பனை செய்து வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

நாடு முழுவதிலும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும் என பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா். இதனையடுத்து, அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் ரூ. 20-க்கு தேசிய கொடி பொதுமக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி 100 -க்கும் மேற்பட்ட நரிக்குறவா்கள் தெருவோரக் கடைகள் அமைத்து பாசி மற்றும் பொருள்கள் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தெருவோரக் கடைகள் திறக்கும் முன்னா் தேசியக் கொடியேற்றி வைத்து விட்டு பொருள்களை விற்பனை செய்யத் தொடங்குகின்றனா். நரிக்குறவா்களின் இந்த செயல் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT