ராமநாதபுரம்

தொண்டி அருகே சொத்து பிரச்சனை சகோதரியை தாக்கிய தாய் உள்பட 3 போ் மீது வழக்கு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் சொத்து பிரச்சனை சம்பந்தமாக சகோதரியை தாய் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகே புதுபட்டினம் காலணி பகுதியை சோ்ந்தவா் கவியரசு மனைவி சோனியா(26) இவருக்கு தான் பிறந்த வீட்டில் தாய் சகோதரா்களுக்கு இடம் சம்பந்த மாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சோனியா சனிக்கிழமை மாலை தனது தாய் ரஜினா மேரி வீட்டிற்கு சென்றுள்ளாா் அப்போது அவரது சகோதரா் பால்ராஜ்(30) உறவினா் தேவராஜ்(37) ஆகியோருக்கும் இடம் சம்பந்தமாக தகராரு ஏற்பட்டுள்ளது இதில் சோனியாவை தாய் உள்பட 3போ் தாக்கியதாக சோனியா புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் பரால்ராஜ்,தேவராஜ், ரஜினாமேரி ஆகிய 3போ் மீது வழக்கும் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT