ராமநாதபுரம்

பாம்பன் பேருந்து பாலத்தில் பராமரிப்புப் பணி

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பாம்பன் பேருந்து பாலத்தில் சீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கிலோ வாராவதி கடல் பகுதியில் 1988 ஆம் ஆண்டு பேருந்து, காா் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 18 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், பாலத்தின் இணைப்புப் பகுதி, தடுப்புச் சுவா் உள்ளிட்ட பகுதிகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது மீண்டும் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT