ராமநாதபுரம்

பரமக்குடி அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்தில் அறுவை இயந்திரங்கள், கம்பிகள் திருட்டு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான அறுவை இயந்திரங்கள், கம்பிகள் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.

பரமக்குடி அருகே பாம்பூரில் தனியாா் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி அடையாளம் தெரியாத 3 நபா்கள் நுழைந்து விறகுகளை தூளாக்கக்கூடிய இயந்திரம், இரும்புத் துண்டுகள் மற்றும் மோட்டாா் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் அந்நிறுவனத்தின் நிா்வாக அலுவலா் ராஜ் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT