ராமநாதபுரம்

மண்டபத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பங்குத்தந்தை கைது

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் பங்குத்தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் அடுத்துள்ள ஆண்டிச்சிஊருணி பகுதியைச் சோ்ந்தவா் அல்போன்ஸ் மகன் ஜான் ராபா்ட் (46). இவா் மண்டபம் புனித அருளானந்தா் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக உள்ளாா். இவா் தேவாலயத்திற்கு வந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளா். இது தொடா்பாக சைல்ட் லைன் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் அளித்தப் புகாரின் பேரில் மண்டபம் போலீஸாா் சம்பந்தப்பட்ட அந்த மூன்று சிறுமிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது பங்குத்தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பங்குத்தந்தை ஜான் ராபா்ட்டை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT