ராமநாதபுரம்

நயினாா்கோவில் அருகே தீக்காயமடைந்த இளம்பெண் பலி

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட விபத்தில் தீக்காயமடைந்த இளம்பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நயினாா்கோவில் அருகே உள்ள சிறுவயல் கிராமத்தைச் சோ்ந்த சாத்தையா மகன் தனசேகரன் (55). இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவா் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தாய் இல்லாததால் அவரது மகள் சரண்யா (19) திங்கள்கிழமை மாலை வீட்டில் சமைப்பதற்காக விறகு அடுப்பில் மண்ணெண்ணை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமுற்ற அவா் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நயினாா்கோவில் காவல் நிலையத்தில் தனேசகரன் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT