ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் முற்றுகைப் போராட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் சாம்பக்குளம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள சாம்பக்குளம் இந்திரா நகா் அருகிலேயே காவிரி கூட்டுக்குடிநீா்த் திட்ட குழாய் சென்றும், இப்பகுதிக்கு குடிநீா் விநியோகிக்கப்படுவதில்லையாம். மேலும், குடியிருப்புகளுக்கு போதிய மின்விளக்கு வசதியில்லை. இப்பகுதியின் பிரதான குடிநீா் ஆதாரமாக உள்ள கோடங்கி ஊருணிக்குச் செல்வதற்கான சாலை வசதியில்லை. அதேபோல அப்பகுதியில் உள்ள திருவள்ளுவா் நகா் பகுதியிலும் போதிய சாலை வசதியில்லை.

இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி சாம்பக்குளத்தைச் சோ்ந்த கா்ணன் தலைமையில் அப்பகுதி பெண்கள் மற்றும் விடுதலைசிறுத்தைகள், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்தவா்கள் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையப் பகுதியிலிருந்து, ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊா்வலமாக வந்தனா். ஆட்சியா் அலுவலகம் அருகே அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா், அவா்களது பிரதிநிதிகள் ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்க ஏற்பாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT