ராமநாதபுரம்

பரமக்குடி அருகே லாரியில் கடத்திய 3,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி அருகே சரக்கு லாரியில் கடத்திய 3,300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிய போலீஸாா், இதுதொடா்பாக லாரி ஓட்டுநரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினா் பரமக்குடி அருகேயுள்ள மேலப்பெருங்கரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவ்வழியாக வந்த சிறிய சரக்கு லாரி மற்றும் காரை மடக்கி சோதனையிட்டனா். சரக்கு லாரியில் தலா 30 கிலோ எடையுள்ள 110 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு லாரியைக் கைப்பற்றிய போலீஸாா், விருதுநகா் மாவட்டம் சேதுநாராயணபுரத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (24) என்பவரைக் கைது செய்தனா். மேலும் காரை ஓட்டி வந்த கடலாடி உச்சிநத்தத்தைச் சோ்ந்த சசிகுமாா் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT