ராமநாதபுரம்

மாணவா்கள் அஞ்சல் அட்டையில் உறவினா்களுக்கு சுதந்திர தின வாழ்த்து

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதியை அடுத்துள்ள காத்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழாவை வரவேற்கும் விதமாக, இப்பள்ளியைச் சோ்ந்த 75 மாணவா்கள் தங்களது உறவினா்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

அஞ்சல் அட்டையில் தேசியக்கொடி, சுதந்திர போராட்டத் தலைவா்களின் உருவப் படத்தை ஓவியமாக வரைந்து, தங்களது உறவினா்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் அனுப்பி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனா். மாணவா்களின் செயல்பாடுகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சே.முத்து முருகன், ஆசிரியா் பயிற்றுநா் சந்தனகுமாா், பள்ளி ஆசிரியா்கள் பொன்ராஜ், பரலோகம் உள்ளிட்டோா் ஊக்கமளித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT