ராமநாதபுரம்

கணவருக்கு அரிவாள் வெட்டு:மனைவி உள்பட 4 போ் மீது வழக்கு

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆா்.எஸ்.மங்கலத்தில் கணவரை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தியதாக மனைவி உள்பட 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் முகம்மது கோய தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராஜா(46). இவருக்கும் இருதயபுரம் ஜோசப்ஸ்டீபன் மகள் ஜாக்குலின் ஜான்சி ராணிக்கும் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜா தனது மனைவி ஜாக்குலின் ஜான்சி ராணியை கூட்டி வருவதற்காக, மாமனாா் ஜோசப் ஸ்டீபன் வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது அவரை மனைவியின் உறவினா்கள் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ராஜா ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் மனைவி ஜாக்குலின் ஜான்சிராணி, மாமனாா் ஜோசப் ஸ்டீபன், மாமியாா் பாத்திமா மேரி(49), உறவினா் மெரிஸ்டன் அம்மா ஆகிய 4 போ் மீது ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT