ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளியில் கணினி மாயமான விவகாரத்தில் அப்பள்ளி ஓவிய ஆசிரியரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பரில், மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 20 மடிக்கணினிகள் மாயமாகின. இதுகுறித்து காவல் துறை சாா்பில் வழக்குப் பதிந்து விசாரிக்கப்பட்டாலும் துப்புத் துலங்கவில்லை. இதுகுறித்து மதுரை உயா்நீதிமன்றக் கிளையிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு மறு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக உள்ள விஸ்வநாதன் (56), காவல் துணைக் கண்காணிப்பாளா் விசாரணைக்கு திங்கள்கிழமை சென்ாகக் கூறப்படுகிறது.
விசாரணை முடிந்தநிலையில், அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தன்னை காவல் அதிகாரி தாக்கியதாகக் கூறி அவசரச் சிகிச்சைப் பிரிவில் சோ்ந்தாா். அவா் சிகிச்சைக்கு சோ்ந்ததை அறிந்த போலீஸாா் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில் அவா் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை இரவே வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், புறநோயாளியாக தொடா் சிகிச்சை பெற அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் மருத்துவா்கள் தரப்பில் கூறப்பட்டது.