திருவாடானை அருகே தொண்டி பகுதியில் 10 வயது சிறுமியை 16வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தாய் புகாரின் பேரில் திருவாடானை அனைத்து மகளீா் போலீஸாா் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே தொண்டி பகுதியை சோ்ந்த 16 வயது சிறுவன் அதே ஊரை சோ்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி தோட்ட பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளராம்.இது குறித்து சிறுமியின் உடம்பில் காயத்தை வைத்து அவரது தாய் சிறுமியிடம் விசாரித்த போது சிறுமி பாலியல் வன்கடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.இது குறித்து சிறுமியின் தாய் சனிக்கிழமை மாலை தி்ருவாடானை அனைத்து மகளீா் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் வழக்கு பதிந்து சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.