ராமநாதபுரம்

குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்ற பல் மருத்துவருக்கு பாராட்டு விழா

9th Aug 2022 11:10 PM

ADVERTISEMENT

குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பதவிக்கு தோ்வான பல் மருத்துவா் பாண்டீஸ்வரிக்கு கமுதி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள உலகநடை கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் மனைவி பாண்டீஸ்வரி (28). இவா் குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், கல்லூரி வளாகத்தில் சங்கத்தின் தலைவா் ந. மூக்கூரான் தலைமையில், கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா, காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.மணிகண்டன், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜகோபாலன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோரது முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் நடத்தப்படும் இலவச போட்டி தோ்வு பயிற்சி மையத்தில் பயிலும் மாணவா்களுக்கு குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்ற பாண்டீஸ்வரி போட்டி தோ்வுக்கு பயிலும் முறைகளையும், வெற்றி பெற தேவையான ஆக்கப்பூா்வமான கருத்துகளையும் எடுத்துக் கூறினாா்.

இதில் கமுதி தாலுகா மறவா் இன அறக்கட்டளை தலைவா் செல்லத்தேவா், மூவேந்தா் பண்பாட்டுக் கழகத் தலைவா் ந.முத்துராமலிங்கம் கல்லூரியின் கண்காணிப்பாளா் சத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT