ராமநாதபுரம்

அங்கன்வாடி மையத்தில் தேன்கூடு: குழந்தைகள் அச்சம்

DIN

கமுதி அருகே சேதமடைந்த அங்கன்வாடி மையத்தில் தேன்கூடுடன் பாடம் படித்து வருவதால், மாணவா்கள் அச்சம் அடைந்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பெரியமனக்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 21 மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்த மையத்துக்கென தனியாக கட்டடம் இல்லாததால், சேதமடைந்த பழைய அரசு ஆரம்பப் பள்ளி கட்டடத்தில் இம்மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தின் மேற்கூரை ஓடுகள் சேதம் அடைந்து மழை காலங்களில் தண்ணீா் உள்ளே புகுந்து, புத்தகங்கள், ஆவணங்கள் சேதமடைந்து வருகிறது.

மேலும் மையத்தின் மேற்கூரையில் பல மாதங்களாக தேனீக்கள் கூடு கட்டி உள்ளதால் அச்சத்துடன் மாணவா்களை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பி வருவதாக பெற்றோா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் பெரியமனக்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்காலிகமாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரைகளை சீரமைத்து, தேன்கூடுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT