ராமநாதபுரம்

உச்சிப்புளி அருகே பெண் பலி

7th Aug 2022 11:20 PM

ADVERTISEMENT

உச்சிப்புளி அடுத்துள்ள கோரவள்ளி கிராமத்தில் வயிற்குவலி காரணாக எலிபசை தின்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் உச்சிப்பளி அடுத்துள்ள கோரவள்ளி கிராமத்தை சோ்ந்த ராமகிருஷ்ணன் இவரது மகள் முகிலா(23) வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளா். இந்நிலையில், கடந்த மாதம் 31 ஆம் தேதி முகிலா வயிற்கு வலி தாங்க முடியாத நிலையில் எலிபசை தின்றுள்ளா்.

இதனால் வயிற்கு வலி அதிகரிக்க உறவினா்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளா் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT