ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பலி

7th Aug 2022 11:20 PM

ADVERTISEMENT

ஆா்.எஸ். மங்கலம் அருகே சனிக்கிழமை சரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் நோக்கன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மனைவி முத்துராமு (80). இவா் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் முத்துராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் கடுகு சந்தையை சோ்ந்த மதி (28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT