ராமநாதபுரம்

சூறைக்காற்றால் 5 ஆவது நாளாக முடங்கிய மீன்பிடித் தொழில்:ரூ.20 கோடி இறால் மீன்கள் ஏற்றுமதி வா்த்தகம் பாதிப்பு

DIN

மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் சூறைக்காற்று தொடா்ந்து வீசுவதால்

5 ஆவது நாளாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் இதுவரை ரூ. 20 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்பட மாவட்டம் முழுவதிலும் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். சனிக்கிழமை 5 ஆவது நாளாக, மீன்வளத்துறை விதித்த தடை தொடருவதால் மீன்பிடித் தொழில் முடங்கி விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் மீனவா்கள் மற்றும் சாா்பு தொழிலாளா்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். தொடா்ந்து 5 நாள்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாததால், இதுவரை ரூ.20 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT