ராமநாதபுரம்

மனைவியைத் தாக்கிய வழக்கு: பட்டாலியன் பிரிவு போலீஸ் கைது

6th Aug 2022 10:29 PM

ADVERTISEMENT

 

பெண் காவலராக உள்ள மனைவியைத் தாக்கிய வழக்கில் மதுரை பட்டாலியன் பிரிவு போலீஸ்காரா் ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி கோடரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் கனகராஜ் (31). மதுரை பட்டாலியன் 6 ஆவது பிரிவில் போலீஸ்காரராக உள்ளாா். இவரது மனைவி முருகவள்ளி (30). கேணிக்கரை காவல் நிலைய முதல்நிலைக் காவலராக உள்ளாா். இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளாக கனகராஜ், முருகவள்ளி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவா், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இரு குழந்தைகளும் முருகவள்ளியிடமே உள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் தனியாா் பள்ளியில் பயிலும் குழந்தைகளை தனக்கு தெரிந்தவரின் இருசக்கர வாகனத்தில் முருகவள்ளி அனுப்பி வைத்துள்ளாா். அதை கனகராஜ் கண்டித்துள்ளாா். இதனால், முருகவள்ளி கடந்த 2 ஆம் தேதி குழந்தைகளை பள்ளிக்கு, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துவந்துள்ளாா். அப்போது பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த கனகராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இந்நிலையில் கனகராஜ் தன்னை மனைவியும், அவரது குடும்பத்தினரும் தாக்கியதாக புகாா் தெரிவித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்ந்தாா். இதையடுத்து கனகராஜ் தன்னைத் தாக்கியதாக ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் முருகவள்ளி புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கனகராஜை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் கனகராஜ் தன்னைத் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் முருகவள்ளி உள்ளிட்டோா் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT