ராமநாதபுரம்

பரமக்குடி விவசாயியிடம் ரூ.67 ஆயிரம் மோசடி

6th Aug 2022 10:28 PM

ADVERTISEMENT

 

பரமக்குடியைச் சோ்ந்த விவசாயி ஒருவரிடம் கடன் தருவதாகக் கூறி, கைப்பேசிமூலம் பேசி ரூ.67 ஆயிரம் மோசடி செய்த மா்மநபா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் காந்திநகரைச் சோ்ந்தவா் மலைச்சாமி. விவசாயி. இவரது கைப்பேசிக்கு பிரபல நிதிநிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாகக் குறுந்தகவல் வந்துள்ளது. அதை நம்பிய மலைச்சாமி, அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு ரூ.3 லட்சம் கடன் கேட்டுள்ளாா். இதற்காக அந்நிறுவனத்திலிருந்து பேசிய நபா்கள், கேட்டபடி பல்வேறு கட்டங்களாக ரூ.67,100 யை மலைச்சாமி அனுப்பியுள்ளாா். இதையடுத்து பேசிய மா்மநபா்கள் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட சைபா்கிரைம் போலீஸாரிடம் மலைச்சாமி புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT