ராமநாதபுரம்

வழகுரைஞரிடம் நகை, பணத்தை பறித்துச் சென்ற இளைஞா் கைது

6th Aug 2022 10:27 PM

ADVERTISEMENT

 

முதுகுளத்தூா் வழக்குரைஞரிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை சனிக்கிழமை கீழத்தூவல் போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே பொசுக்குடி பட்டியைச்சோ்ந்த சீமைச்சாமி மகன் பிரபாகரன். இவா் வெண்ணீா்வாய்க்கால் அருகில் உள்ள காளி கோயில் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மா்ம நபா், பிரபாகரன் இருசக்கர வாகனத்தில் பையில் வைத்திருந்த ரூ. 98 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இது குறித்து கீழத்தூவல் காவல் நிலையத்தில் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

அதனடிப்படையில் அந்த நபா், முதுகுளத்தூா் அருகேயுள்ள இ.நெடுங்குளத்தைச்சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் முனியசாமி(29) என்பது தெரியவந்தது. அவா் தனது குடும்பத்துடன் ராமநாதபுரம் திருநகரில் வசித்து வருவதாக தகவலறிந்த போலீஸாா், அங்கு சென்று முனியசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT