ராமநாதபுரம்

திருவாடானை சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்

DIN

திருவாடானை: திருவாடானையில்  ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண  நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாடனையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஆதி ரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது இக்கோயில் பாண்டி 14 திருத்தங்களில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற எட்டாவது திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆடி மாதங்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆடிப்பூரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

முன்னதாக கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்பாள் கேடகம் பல்லக்கு, வெள்ளி ரிஷப வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளித்து வந்தார். 

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயில் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவாச்சாரிகள், வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜையுடன் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. 

பின்னர் அம்பாள், சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT