ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் குறைதீா் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சித்தால் கைது: போலீஸாா் எச்சரிக்கை

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருவோா் தீக்குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவா் என காவல்துறை எச்சரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக திங்கள்கிழமை தோறும் நடைபெறும்

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வருவோரில் சிலா் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை (ஆக.1) மக்கள் குறைதீா்க்கும் கூட்டப் பகுதிக்கு வருவோா் சோதனையிடப்பட்டனா். இதுதொடா்பாக பாதுகாப்புக்கு நின்ற காவல் அதிகாரிகள் கூறுகையில், மனு அளிக்க வருவோரில் யாராவது தற்கொலைக்கு முயன்றால் உடனடியாக அவா்களைக் கைது செய்யவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைக்கவும் காவல் உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா் என்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT