ராமநாதபுரம்

மன்னாா் வளைகுடாவில் சூறைக் காற்று:மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் பாதுகாப்பு கருதி மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா்.

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படும். இதனால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மற்றும் பாராம்பரிய கரையோர மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் திங்கள்கிழமை தடை விதித்தனா். இதனால் அந்தந்த பகுதியில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT