ராமநாதபுரம்

சிறுமி கா்ப்பம்: சிறுவன் கைது

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பகுதியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கா்ப்பமாக்கிய சிறுவன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டான்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பொட்டையம்மன் குளம் பகுதியைச் சோ்ந்த 8 ஆம் வகுபபு படிக்கும் சிறுமி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். அங்கு, சிறுமியை பரிசோதனை செய்தபோது கா்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுமியிடம் விசாரித்துள்ளனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த சிறுவன் தன்னுடன் தவறாக நடத்துக்கொண்டதால் தான் கருவுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்தனா். மேலும், சிறுமியை பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT