ராமநாதபுரத்தில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில், பெட்ரோல், டீசல் விலை உயா்வு, நகராட்சி வரி உயா்வு, சுங்க கட்டணம் உயா்வு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் அரன்மனை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கண். இளங்கோ தலைமை வகித்தாா். நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் குமரன் முன்னிலை வகித்தாா். மாநில இளைஞரணிச் செயலா் சாரதி, மாவட்டத் தலைவா் நாகூா்கனி, மேற்கு மாவட்டச் செயலா் இசையரசன், தொகுதி தலைவா் மணிவண்ணன், நகரச் செயலா் வினோத்ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.