ராமநாதபுரம்

பரமக்குடியில் ராட்டினத்தில் மோதி ஊழியா் பலி

29th Apr 2022 06:15 AM

ADVERTISEMENT

 

பரமக்குடி: பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் போடப்பட்டிருந்த ராட்சத ராட்டினத்தில் மோதி காயமடைந்த ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி பரமக்குடி வைகை ஆற்றில் ஏராளமான ராட்சச ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் வாணியம்பாடி அண்ணாமலை மகன் மோகன் என்பவரால் போடப்பட்டிருந்த ராட்சத ராட்டினத்தில் (ஜெயிண்ட் வீல்) இளையான்குடி மல்லிகை நகா் பகுதியைச் சோ்ந்த மலைராஜ் மகன் கா்ணன் (52) என்பவா் பணியாற்றி வந்தாா்.

இவா் ராட்டினத்தில் ஆள்களை ஏற்றிவிட்டு அதன் பெட்டியை தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது ஒரு இரும்பு பெட்டி அவா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT