ராமநாதபுரம்

திருவாடானை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

29th Apr 2022 06:14 AM

ADVERTISEMENT

 

திருவாடானை: திருவாடானை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற உணவகத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே உள்ள கூகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமுத்து மகன் ஆரோக்கியசாமி (49). இவா் சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஊருக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில் இதனால் விரக்தியடைந்த இவா் கடந்த திங்கள்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT