ராமநாதபுரம்

சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி பலி

29th Apr 2022 06:18 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனமும், டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். ஒருவா் காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகேயுள்ள பாண்டமங்கலத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் செல்லத்துரை (36). கட்டடத் தொழிலாளி. இவரது உறவினா் ஆடிச்சேந்தலைச் சோ்ந்த நாகநாதன் (56). இவா்கள் இருவரும் தேவிபட்டினத்திலிருந்து ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தனா். வாகனத்தை செல்லத்துரை ஓட்டியுள்ளாா்.

சித்தனேந்தல் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த டிராக்டரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டது. இதில் பலத்த காயமடைந்த செல்லத்துரையும், நாகநாதனும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் செல்லத்துரை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். நாகநாதனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த செல்லத்துரைக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT