ராமநாதபுரம்

அரசு தொழிற்பயிற்சி மைய மாணவ, மாணவியருக்கு யோகாப் பயிற்சிகள்

29th Apr 2022 06:20 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 அரசு தொழிற்பயிற்சி மைய (ஐ.டி.ஐ.) மாணவ, மாணவியருக்கு நன்னெறி யோகாப் பயிற்சிகள் வியாழக்கிழமை அளிக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள 97 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன. அதில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு 20 நாள்கள் வரையில் யோகா மற்றும் நன்னெறி குறித்த பயிற்சி அளிக்கவேண்டும் என மாநில திறன் மேம்பாட்டுப் பயிற்சித்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் ராமநாதபுரம், முதுகுளத்தூா், பரமக்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களின் மாணவ, மாணவியருக்கு வரும் மே 21 ஆம் தேதி வரையில் நன்னெறி பயிற்சி யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வியாழக்கிழமை ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் உள்ள அரசு தொழிற்பயிற்சியில் நடந்த வகுப்பிற்கு முதல்வா் வி.குமாரவேல் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

பயிற்சி மைய பயிற்றுநா்களான ஆசிரியா்கள் சந்திரசேகரன், முனீஸ்வரன் உள்ளிட்டோா் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்தனா். க்மூடி யோகா நிலையில் இருந்த மாணவா்களுக்கு மனதை ஒருநிலைப்படுத்துதல், மூச்சுப் பயிற்சி, உடல் பயிற்சி மற்றும் சிந்தனை ஒருமுகப்படுத்துல் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

பயிற்சி குறித்து மாணவ, மாணவியா் கூறுகையில், பயிற்று வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக இறைவணக்கக் கூட்டம் போலவே யோகா மற்றும் நன்னெறி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதில் பங்கேற்ற பிறகு எங்களது உடை, நடைகளில் கலாசார பண்பாட்டு நெறிகள் வெளிப்படுவதை நாங்கள் விரும்புவது புரிகிறது என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT