ராமநாதபுரம்

கமுதி தாலுகாவில் 53 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

24th Apr 2022 11:19 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள 53 கிராம ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் முன்னிலையிலும், ஊராட்சி தலைவா்கள் தலைமையிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, பசும்பொன் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனா்.

கீழராமநதி மற்றும் மேலராமநதி ஊராட்சிகளில், கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் தமிழ்செல்வி போஸ் முன்னிலையில், ஊராட்சி தலைவா்களின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

முஷ்டக்குறிச்சி ஊராட்சியில் அதன் தலைவா் பரமேஸ்வரி பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், மாணவா்களுக்கான விளையாட்டு மைதானம் அமைக்கவும், மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி கேட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல், தாலுகாவில் உள்ள 53 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவா்கள் தலைமையில், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT