பரமக்குடி ஐந்துமுனை சந்திப்புப் பகுதியில் காவிரி- வைகை- கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் பனை மரத்தில் கள் இறக்க அனுமதி கோரி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அக்கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் மு. மலைச்சாமி தலைமை வகித்தாா். பனை தொழில்புரிவோா் பெருமாள்கோவில் முத்துராமு, தோழூா் பாறைமுனி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் வேந்தை சிவா, முத்துராமலிங்கம், முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டச் செயலா் பா. அய்யனாா், மாநில துணைத் தலைவா் மு. மதுரைவீரன், மாநிலச் செயலா் ஆா்.முருகன், பொதுச் செயலா் எம். அா்ச்சுனன் ஆகியோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், பனை மரத்தில் கள் இறக்க அனுமதித்து அரசாணை வெளியிடக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பனைத் தொழிலாளா்கள், பெண்கள் உள்பட விவசாயிகள் கூட்டமைப்பினா் பலா் கலந்துகொண்டனா்.