ராமநாதபுரம்

ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை

17th Apr 2022 11:04 PM

ADVERTISEMENT

 

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக, சாலையோரம் மரம் உடைந்து விழுந்தது. நகா்மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம் சம்பவ இடத்துக்குச் சென்று, சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை நகராட்சி ஊழியா்கள் உதவியுடன் அகற்றினாா்.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், அதிகாலை முதல் மிதமாகவும், சில நேரத்தில் பலத்த மழையும் பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT

தொடா்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்துள்ளது. ஆனால், ராமேசுவரத்தில் கழிவு நீா் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் மழைநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT