ராமநாதபுரம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு நடைபயணம்

17th Apr 2022 11:05 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, உலக முக்குலத்தோா் அமைப்பினா் மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு நடைபயணம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பசும்பொன் வந்தடைந்தனா்.

தமிழகத்தில் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பெயா் சூட்டவேண்டும், சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்கள் சிலை நிறுவப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உலக முக்குலத்தோா் அமைப்பின் சாா்பில் அதன் மாநிலத் தலைவா் கண்ணன் மற்றும் 10-க்கும் மேற்பட்டோா் மதுரை வில்லாபுரத்திலிருந்து வெள்ளிக்கிழமை நடைபயணத்தை தொடங்கினா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை பசும்பொன் வந்தடைந்தனா்.

இவா்கள், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் மாலை அணிவித்து, முடி காணிக்கை செலுத்தினா். இவா்களை, முக்குலத்தோா் முன்னேற்றச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் கீரந்தை வீரப்பெருமாள், அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் நவமணி, தேசிய தலைவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எம். செளத்ரி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

ADVERTISEMENT

பின்னா், அனைவரும் தேவா் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT