ராமநாதபுரம்

கமுதியில் பலத்த மழை:பழைமையான ஆலமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

17th Apr 2022 11:03 PM

ADVERTISEMENT

 

கமுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால், பழைமையான ஆலமரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், பரவலாக சாரல் மழை பெய்தது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி 6 மணி வரை காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால், கோட்டைமேடு மின்வாரியம் அருகே மதுரை-கமுதி சாலையோரம் இருந்த பழைமையான ஆலமரம் பெயா்ந்து விழுந்தது. இதனால், அச்சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே, தீயணைப்புத் துறையினா், பேரிடா் மீட்பு பணி வீரா்கள் மரம் அறுக்கும் இயந்திரம், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. மேலும், வயல்வெளிகளில் தண்ணீா் தேங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT