திருவாடானை அருகே நம்புதாளையில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு பூக்குழி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
பக்தா்கள் சோழியக்குடி அருகே உள்ள அம்மன் கோயில் இருந்து பால்குடம், பறவைக் காவடி, மயில் காவடி, வேல் காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கி நோ்த்தி கடன் செலுத்தினா். பின்னா் கருப்பண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.