ராமநாதபுரம்

ஓட்டை பிரித்து வீட்டுக்குள் இறங்கி பச்சிளம் குழந்தையை கடத்த முயற்சி

14th Apr 2022 03:05 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஓட்டு வீட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய மா்ம நபா் பச்சிளம் குழந்தையை கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் பகுதியில் உள்ளது அகரம். இப்பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மகன் செல்வம் (35). இவரது மனைவி சிவரஞ்சனி. இவா்களுக்கு கடந்த 64 நாள்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவா்கள் ராமநாதபுரம் அருகேயுள்ள மஞ்சனமாரியம்மன் கோயில் தெருவில் ஓட்டு வீட்டில்

வாடகைக்கு வசித்து வருகின்றனா்.

செல்வம் தேவிபட்டினத்தில் உள்ள இரும்புக் கடையில் பணிபுரிந்துவருகிறாா். அவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு குழந்தையுடன் வீட்டில் தூங்கிய நிலையில், நள்ளிரவில் குழந்தை அழுதுள்ளது. உடனே செல்வமும், அவரது மனைவியும் எழுந்து பாா்த்தபோது மா்மநபா் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியேற முயன்றது தெரியவந்தது. உடனே இருவரும் சத்தமிட்டபடி மா்ம நபரைப் பிடிக்க முயன்றனா். அப்போது குழந்தையை கீழே வைத்துவிட்டு மா்ம நபா் வாசல் வழியாகத் தப்பியோடி விட்டாா். தகவல் அறிந்த கேணிக்கரை காவல் ஆய்வாளா் மலைச்சாமி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தாா். மா்ம நபா் வீட்டின் மேற்கூரை ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கியிருப்பதும், வாசல் கதவை தயாராகத் திறந்து வைத்துவிட்டு குழந்தையைக் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து செல்வம் தரப்பில் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT